வகுப்பறையில் 18 மணி நேரம் சிக்கிக் கொண்ட மாணவி !

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (22:03 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளியில் படித்து வரும் சிறுமி ஒருவர்  பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லாமல் 18 மணி நேரம் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மா நிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள சாம்பல் பகுதியில், ஒரு பள்ளியில் 7 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லவில்லை.

இதுபற்றி சிறுமியின் பாட்டி, அக்கம் பக்கம், நண்பர்களின் வீட்டுகளில் எல்லாம் விசாரித்துள்ளனர்.தேடிப் பார்த்துள்ளனர். ஆனால், கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்றுக் காலை பள்ளியைத் திறந்தபோது,  சிறுமி வகுப்பறையில் சிக்கிக் கொண்டது தெரியவந்துள்ளது. ஆசிரியர் மற்றூம் பள்ளி ஊழியர்கள், சிறுமி உள்ளே இருப்பதைக் கவனிக்காமல் வகுப்பறையைப் பூட்டிச் சென்றதும் அவர் 18 மணி நேரம் உள்ளே இருந்தது தெரியவந்துள்ளாது.

 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்