அபாய சடங்கிற்கு விரைவில் தீர்வு…சட்டத்தின் ‘பிடி’ வலுவானது…

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (15:25 IST)
சிறுமிகளின் பிறப்புறுப்பு சிதைப்புக்கு தடை கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வின் விசாரணைக்கு மாற்றப்பட்டதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள தாவுதி போஹ்ரா என்ற சமூகத்தினர் மத்தியில் சிறுமிகளின் பிறப்புறுப்பைச் சிதைப்பது இந்த காலத்திலும் ஒரு சடங்காகக் கடைபிடிக்கப்படுகிறது. இத்தகைய சடங்குகள் சிறுமியரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கின்றது.

அதை தடை செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதி மன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையில் ஏ.எம்.கான்வில்கர், டிஒய்.சந்திரசௌத் ஆகிய நீதிபதிகள்  கொண்ட அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் போஹ்ரா சமூகத்தினர் சார்பாக ஆஜாராகிய வழக்கறிஞர் இது முஸ்லிகள் மத்தியில் கடைபிடிக்கப்படும் சுன்னத் மாதிரி ஒரு சடங்குதான் என தொடர்ந்து  வாதிட்டார். அதனை தொடர்ந்து குறிக்கிட்ட நீதிபதி இந்த நடைமுறையை அரசியல் சட்டத்தின் நோக்கத்தில்தான் காண முடியும் .

நம் அரசியம் சட்டம் ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்கு  தீங்கு செய்ய விளைவிப்பதை ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவித்தார்.பின்னர் இந்த வழக்கு விசாரணையை அவர் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்