10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் ராஜதுரோக சட்டம் பாயும்

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (18:52 IST)
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவின் கீழ் ராஜதுரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்திரபிரேதச நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


 

 
ரூபாய் நோட்டுகள் விரைவில் கிழிந்து விடுவதால் மத்திய அரசு கடந்த 2010-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயத்தை தயாரித்து வெளியிட்டது. 
 
இந்நிலையில் வட மாநிலங்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி பரவியது. இதனால் பெரும்பாலானோர் 10 ரூபாய் நானயத்தை வாங்க மறுத்து வருகின்றனர்.
 
குறிப்பாக உத்திரபிரேதம், டெல்லி, அரியானா போன்ற மாநிலங்களில் வணிகர்கள் பெரும்பாலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர்.
 
அதைத்தொடர்ந்து பில்பிட் மாவட்ட மாஜிஸ்திரேட் நேற்று நிருபர்களை அழைத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
 
10 ரூபாய் நாணயம் தேசிய பணமாகும். அதை வாங்க மறுப்பது குற்றமாகும். 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124ஏ-ன் கீழ் ராஜதுரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்