கோமாவில் இருப்பவர் என் கணவர் : சொந்தம் கொண்டாடும் இரு பெண்கள்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2016 (16:47 IST)
கோமாவில் இருக்கும் நபர் தன்னுடைய கணவர் என்று இரு பெண்கள் சொந்தம் கொண்டாடும் விவகாரம் டெல்லியில் நடந்து வருகிறது.


 

 
சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பெண் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் கோமாவில் இருக்கும் தன்னுடைய கணவருக்கு மற்றொரு பெண்ணும், அவரது மகனும் சொந்தம் கொண்டாடுவதோடு, மருத்துவமனையிலிருந்த தன்னுடைய கணவரை அவர்கள் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டார்கள் என்று புகார் கூறியிருந்தார்.
 
ஆனால், அவர் புகார் கூறிய அந்த பெண்ணோ, தான்தான் அவரின் சட்டரீதியான உண்மையான மனைவி என்று கூறுகிறார். சம்பந்தப்பட்ட நபரோ கோமாவில் இருக்கிறார். 
 
எனவே, இதற்கு என்ன தீர்ப்பு வழங்குவது என்று குழம்பிப் போன நீதிபதிகள், தற்போதைக்கு கோமாவில் இருக்கும் நபரை, புகாரில் கூறப்பட்ட பெண் அருகில் இருந்து பார்த்துக் கொள்ளலாம், புகார் அளித்த பெண் வாரத்தில் ஒவ்வொரு  வியாழனும் நேரில் சென்று தன்னுடைய கணவனை பார்க்கலாம். அப்போது அவருடன் ஒரு பெண் காவல் அதிகாரியும் அவர் உடன் செல்ல வேண்டும்  என்று கூறியுள்ளார்கள்.
 
இந்த வழக்கு அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. அதுவரை, அந்த இரண்டு பெண்களும் நீதிபதிகள் கூறிய தீர்ப்புக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்