விசாரணை கைதி மரணம்; காவல் நிலையத்திற்கு தீ வைத்த மக்கள்!

திங்கள், 23 மே 2022 (12:17 IST)
அசாமில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் பதாத்ரபா பகுதியை சேர்ந்தவர் சபிகுல் இஸ்லாம். மீனவரான இவரை விசாரணைக்காக சமீபத்தில் பதாத்ரபா காவல்நிலைய போலீஸார் அழைத்து சென்றுள்ளனர். அங்கு விசாரணையின்போது சபிகுல் இஸ்லாம் உயிரிழந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பலர் காவல் நிலையத்தை தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காவல் நிலைய எரிப்பு வழக்கில் போலீஸார் பெண்கள் உட்பட 20 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்