இஸ்ரேல் போரில் பணிபுரிந்த முதல் இந்தியர்.. கர்ப்பிணி மனைவி.. 5 வயது குழந்தை..!

Siva
புதன், 6 மார்ச் 2024 (08:13 IST)
பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கம் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில மாதங்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலியானதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த போரில் முதல் முறையாக ஒரு இந்தியர் உயிரிழந்திருப்பதாகவும் கேரளாவை சேர்ந்த அவருக்கு கர்ப்பிணி மனைவி மற்றும் ஐந்து வயது குழந்தை இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த பட்நிபின் மேக்ஸ்வெல் என்பவர் உயிர் இழந்திருப்பதாகவும் அவருடைய இரண்டு நண்பர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது

இது குறித்த தகவலை இந்திய தூதரகத்துக்கு இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில் உயிரிழந்தவரின் உடலை கேரளாவுக்கு கொண்டு வரவும் காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது

உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த பட்நிபின்  மேக்ஸ்வெல் என்பவருக்கு கர்ப்பிணி மனைவி மற்றும் ஐந்து வயது குழந்தை இருப்பதாகவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னாள் தான் அவர் இஸ்ரேல் சென்றதாகவும் திடீரென்று இப்படி ஆகும் என்று அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது

இந்த துக்க செய்தியை கேட்டு அவரது மனைவி இடிந்து போய் இருப்பதாகவும் 5 வயது குழந்தையையும் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் நான் எப்படி காப்பாற்ற போகிறேன் என்று அவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்