உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்? சட்டசபையை சுற்றி 144 தடை உத்தரவு!

Siva

திங்கள், 5 பிப்ரவரி 2024 (06:46 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்த விவாதம் நடைபெற உள்ளதை அடுத்து சட்டசபை வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து இன்று இந்த சட்டம் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் விவாதம் நடத்த உள்ளனர். இதனை அடுத்து சட்டசபை வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அமைச்சரவை கூட்டத்தில் பேசிய போது பொது சிவில் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதலாகவும் இதை சட்டமாக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளனர்  
 
உத்தரகாண்டில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று முதல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று விவாதம் முடிவடைந்து நாளை மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்