இந்தியாவில் தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவு தேவையா என்ற வழக்கில் தற்காலிகமாக இந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தியாவில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்படுவது குறித்து சமீப காலமாக விவாதம் எழுந்துள்ளது. அரசியல்வாதிகள் தங்கள் சொந்த காழ்ப்புணர்ச்சியின் பேரில் சிலர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்வதாகவும் புகார் உள்ளது.
இதனால் தேசத்துரோக வழக்கு தொடுப்பது ரத்து செய்யப்பட வேண்டும் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் விளக்கத்தை கேட்டுள்ள உச்சநீதிமன்றம், மத்திய அரசு விளக்கம் அளிக்கும் வரை தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவின் கீழ் எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.