Baby Berth - லக்னோ மெயில் ரயிலில் சோதனை அடிப்படையில் அறிமுகம்!

புதன், 11 மே 2022 (11:03 IST)
பேபி பெர்த் வசதி, லக்னோ - டெல்லி இடையே இயக்கப்படும் லக்னோ மெயில் ரயிலில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

 
பச்சிளம் குழந்தையுடன் பயணிக்கும் பெண்களுக்கு ஏதுவாக பேபி பர்த்சீட் இன்னும் கூடுதல் சீட் இணைக்கும் வசதியை வடக்கு ரயில்வே சோதனை முறையில் அமல்படுத்தி உள்ளது.இந்த முயற்சிக்கு பயணிகள் மத்தியில் குறிப்பாக பெண் பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 
 
ரயிலில் பயணம் செய்யும் போது குழந்தைகளிடம் வரும் பெண்கள் பர்த்தில் தூங்கும் போது குழந்தைகளை கையில் அல்லது மடியில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இந்த பேபி பெர்த் சீட்டில் குழந்தைகளை படுக்க வைத்து அதற்கான பெல்ட்டை மாட்டி விட்டால் குழந்தைகள் பயமின்றி நிம்மதியாக தூங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்களிலும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேபி பெர்த் வசதி, லக்னோ-டெல்லி இடையே இயக்கப்படும் லக்னோ மெயில் ரயிலில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இதன் வரவேற்பை பொருத்து மற்ற ரயில்களிலும் பேபி பெர்த் வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேபி பெர்த் படுக்கை பயன்பாட்டில் இல்லாதபோது, அதனை மடித்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்