கேரளா மாநிலம் தலசேரியில் உள்ள ஐடிபிஐ வங்கியின் காவலாளி துப்பாக்கியை சுத்தம் செய்த போது அது தவறுதலாக சுட்டதில் அந்த வங்கியின் பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் ஐடிபிஐ வங்கியில் சேல்ஸ் பிரிவில் வேலைக்கு சேர்ந்தவர் 25 வயதான வில்னா என்பவர். இவருடை தலையில் துப்பாக்கி குண்டு தவறுதலாக பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சரியாக இன்று காலை 9.30 மணியளவில் நடந்துள்ளது. ஐடிபிஐ வங்கியின் தலசேரி கிளையின் காவலராக உள்ள 51 வயதான முன்னாள் ராணுவ வீரர் ஹரிந்தர்நாத் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து அதில் குண்டுகளை நிரப்பும் போது இந்த சம்பவம் தவறுதலாக நடந்துள்ளது.
ராணுவத்தில் எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் என்ஜினீரிங் பிரிவில் பனியாற்றிய ஹரிந்தர்நாத் 2011-இல் ஓய்வு பெற்று 2013 முதல் இந்த வங்கியில் கவலராக பணி புரிந்து வந்துள்ளார். தற்போது இந்த பாதுகாப்பு காவலர் காவல் துறையின் காவலில் எடுக்கப்பட்டு ஐபிசி 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.