காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்....5 ராணுவ வீரர்கள் உயிர்தியாகம்...

Webdunia
ஞாயிறு, 3 மே 2020 (15:50 IST)
இன்று வடக்கு காஷ்மீரில் தீவிரவாதிகள்   தாக்குதல் நடத்தினர். இதில், உதவி காவல் ஆய்வாளர், இரண்டு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள்  தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.

கஷ்மீரில் குப்வாரா மாவட்டம் ஹம்ந்த்வாராவில் உள்ள சங்கிமும் என்ற பகுதியில் தீவிரகள் சிலர் ஒரு வீட்டில் பதுங்கியிருந்து அந்த வீட்டில் இருந்தவர்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில். காஷ்மீர் போலீஸார் அங்கு சென்றனர்.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள வீட்டில் இருந்து காட்டுப் பகுதிக்குச் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிகிறது.பின்னர் வீட்டில் இருந்த தீவிரவாதிகள் மீது துப்பாகிச் சூடு நடத்தி வீட்டில் இருந்தவர்களை மீட்டுள்ளனர். அதேசமயம் தீவிரவாதிகல் நடத்திய தாக்குதலில் 5  ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

மெலும்,இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான ஹைதர் என்ற நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.,

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்