மாத ஊதியம் பெறும் தீவிரவாதிகள்

Webdunia
புதன், 21 டிசம்பர் 2016 (16:27 IST)
இந்தியா காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் மாத ஊதியம் பெற்றுக்கொண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.


 

 
பயங்கரவாதம் தொழிலாக செய்யப்படுவது எனபது இப்போதுதான் வெளியில் தெரிய தொடங்கியுள்ளது. கிளர்ச்சி காரணமாக ஆயுதப் போரட்டத்தில் ஈடுபடும் குழுவை முதன்மை நாடுகள் நிதி வழங்கி பயன்படுத்தி கொள்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியா காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் பயங்கரவாதிகளில் ஊதியம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மாத ஊதியம்:-
 
வெளிநாட்டினருக்கு - ரூ.15,000
 
உள்நாட்டினருக்கு - அதிகபட்சமாக ரூ.10,000
 
குழு கமாண்டருக்கு - ரூ.50,000
 
ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தொகை:-
 
வெளிநாட்டினருக்கு மற்றும் உள்நாட்டினருக்கு - ரூ.2 லட்சம்
 
சிறந்த பயங்கரவாதியாக தேர்ந்தெடுக்கபவர்களுக்கு பரிசு தொகை ரூ.1 லட்சம்
 
இறந்து போன வெளிநாட்டினருக்கு உதவித் தொகை முதலில் 50 ஆயிரம், பின்னர் மாதம் 5 ஆயிரம். உள்நாட்டினருக்கு உதவித் தொகை முதலில் 25 ஆயிரம், பின்னர் மாதம் 3 ஆயிரம்.
 
இவ்வாறு பயங்கரவாதிகளுக்கு ஊதியம் வழங்கப்படுகிறதாம்.
 
அடுத்த கட்டுரையில்