இந்த மாற்றத்துக்குப் பிறகு இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டன. புதிய அரசு சீனாவுடன் நெருங்கிய உறவுகளை கட்டியெழுப்பி, 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
இந்தியா, சமீபத்தில் வங்கதேசத்திலிருந்து வரும் ரூ.6,600 கோடி மதிப்பிலான இறக்குமதிகளைத் தடை செய்தது. இது வங்கதேசத்தின் இந்தியாவுக்கு வரும் இறக்குமதிகளில் 42% ஆகும். பதிலுக்கு வங்கதேசமும் இந்திய யார்ன், அரிசி உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய மறுத்தது. அதோடு, இந்திய சரக்குகளை வங்கதேசம் வழியாக செல்வதற்கு டிரான்ஸிட் கட்டணம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் வங்கதேச பாதுகாப்புத்துறை, இந்திய அரசின் GRSE நிறுவனத்துடன் மேற்கொண்ட ரூ.180 கோடி மதிப்பிலான கப்பல் வாங்கும் ஒப்பந்தத்தை தற்போது ரத்து செய்துள்ளது. இது 61 மீ. நீளம், 15.8 மீ. அகலம் கொண்ட ஒரு நவீன கடல் பாதுகாப்பு கப்பல் ஆகும். இது 13 knots வேகத்தில் இயக்கப்படும் வகையில் 24 மாதங்களில் வழங்கப்படவிருந்தது.