டெல்லியை தாக்க திட்டம்..? பாகிஸ்தான் உளவாளிகள் கைது! பரபரப்பு சம்பவம்!

Prasanth Karthick

வியாழன், 22 மே 2025 (10:46 IST)

டெல்லியில் அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியாவிற்குள் புகுந்த 2 பாகிஸ்தானிய உளவாளிகள் பிடிபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினை பெரிதாகியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு இங்கிருந்து உதவிகள் செய்ததாக பிரபல யூட்யூபர்கள், தொழிலதிபர்கள் கைது செய்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் அசம்பாவித செயல்கள் செய்யும் நோக்குடன் வந்த இருவர் பிடிபட்டுள்ளனர். அன்சாருல் மியா அன்சாரி, அக்லாக் அசாம் ஆகிய இருவர் பிடிபட்டுள்ள நிலையில் இவர்கள் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு பணியாற்றுபவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அவர்கள் மீதான விசாரணையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாளத்தை சேர்ந்த மியா அன்சாரி சில ரகசிய ஆவணங்களுடன் டெல்லிக்கு வந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். மியா அன்சாரிக்கு தேவையான உதவிகளை ராஞ்சியை சேர்ந்த அக்லாக் அசாம் செய்து கொடுத்துள்ளார். 

 

கத்தாரில் கார் டிரைவராக பணிபுரிந்த மியா அன்சாரி, அங்கு பாக் உளவு அமைப்பை சேர்ந்தவர்களோடு தொடர்பு ஏற்பட்ட நிலையில் அவர்கள் சில ரகசிய ஆபரேஷனை கொடுத்து அன்சாரியை டெல்லிக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியாகிறது. டெல்லி வந்த அன்சாரி சில ராணுவ தகவல்களை சேகரித்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு திரும்பி செல்ல திட்டமிட்டிருந்தபோது பிடிபட்டுள்ளார்.

 

இவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்து வரும் நிலையில் இவர்களுக்கு பாகிஸ்தானில் யாருடனெல்லாம் தொடர்புள்ளது, இந்தியாவில் வேறு சில உளவாளிகளும் உள்ளனரா என்பது குறித்து தெரிய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் தற்போது திகார் சிறையில் உச்சக்கட்ட பாதுகாப்பில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்