மோடியை கலாய்க்கும் திக் விஜய் சிங்: பிரதமருடன் படித்தவருக்கு பரிசு அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (15:01 IST)
பிரதமர் நரேந்திர மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்ததாக எழுந்த சர்ச்சையை அடுத்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது ஆம் ஆத்மி கட்சி. இந்நிலையில் பிரதமரின் பட்டப்படிப்பு விவகாரத்தை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பேசியுள்ளார்.


 
 
இது குறித்து பேசிய திக் விஜய் சிங், பிரதமர் நரேந்திர மோடியுடன் யாரேனும் சேர்ந்து படித்திருந்தாலோ, அல்லது அவரிடம் டீ வாங்கியிருந்தாலோ அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என கூறினார்.
 
பிரதமர் நரேந்திர மோடியுடன் யாரேனும் ஒருவர் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தேன் என கூறினால், கண்டிப்பாக அவருக்கு ரூபாய் இரண்டு லட்சம் பரிசு ஊக்கத்தொகை வழங்கப்படும். பள்ளி கல்வியை முடித்து பல்கலைக்கழக நுழைவுக்கு தயாராக இருந்ததாக முன்னர் கூறிய மோடி தற்போது பட்டதாரி என தன்னைக் கூறிக்கொள்வது வியப்பாக உள்ளது என்றார் திக் விஜய் சிங்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்