சமீபத்தில் ராம நவமி விழா ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற போது இந்த விழாவில் பாஜக எம்எல்ஏ ராஜா என்பவர் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசிய போது இந்தியா இந்து தேசமாக மாறினால் இங்கு நாம் இருவர் நமக்கு இருவர் கொள்கை உடையவர்கள் மட்டுமே வாக்குரிமை இருக்கும் என்றும் நாம் ஐவர் நமக்கு ஐம்பது பேர் என்ற கொள்கை உடையவர்களுக்கு வாக்குரிமை கிடையாது என்றும் தெரிவித்தார்
இந்து ராஷ்டிரத்தின் தலைநகராக டெல்லி இருக்காது என்றும் காசி, மதுரா அல்லது அயோத்தி ஆகிய நகரங்களில் ஒன்றுதான் இருக்கும் என்றும் இந்து ராஜ்ஜியத்தில் விவசாயிகளுக்கு வரி கிடையாது, பசுவதை கிடையாது, மதமாற்றம் கிடையாது என்றும் பேசினார்.