மோடி சிறந்த நடிகராக வருவார்: தெலுங்கு தேசம் எம்பி சீனிவாஸ் கேசனேனி

Webdunia
சனி, 21 ஜூலை 2018 (07:14 IST)
நேற்று பாராளுமன்றத்தின் மக்களவையில் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த சீனிவாஸ் கேசனேனி கொண்டு வந்த நம்பிக்கைய்யில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் மின்னணு வாக்கெடுப்பு என இரண்டிலும் தோல்வி அடைந்தது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 126 வாக்குகள் மட்டுமே பதிவானது. அதிமுக எம்பிக்கள் உள்பட தீர்மானத்திற்கு எதிராக மொத்தம் 325 எம்பிக்கள் வாக்களித்தனர். இதனால் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த சீனிவாஸ் கேசனேனி எம்பி கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.
 
தீர்மானம் தோல்வி அடைந்த பின்னர் தனக்கு பேச வாய்ப்பு அளிக்குமாறு தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த சீனிவாஸ் கேசனேனி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். அவருக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் சபாநாயகர் அனுமதி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
 
ஒன்றரை மணிநேரம் பிரதமர் மோடி நன்றாக நடித்தார். பிரதமர் உரையை பார்த்தபோது பிளாக் பஸ்டர் படம் பார்த்ததை போல இருந்தது. உலகின் சிறந்த நடிகருக்கான திறமை மோடியிடம் உள்ளது. உலகத்திலேயே மோடி சிறந்த நடிகர் என்றும் கேசனேனி விமர்சனம் செய்தார். அவருடைய இந்த விமர்சனத்திற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்