பில்லிசூனியத்தால் 3 மகள்களை கொன்று தற்கொலை செய்துக்கொண்ட பெற்றோர்

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (15:34 IST)
தெலங்கானா மாநிலத்தில் பில்லிசூனியம், மாந்திரீகம் செய்து வந்தவர் தனது 3 மகள்களையும் கொலை செய்துவிட்டு மனைவியுடன் சேர்ந்து அவரும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொமரய்யா என்பருக்கு 6-10 வயதுக்குள் 3 மகள்கள் இருந்தனர். இவர் மாந்திரீகம், பில்லிசூனியம் போன்ற காரியங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இதைக் கண்டித்த உறவினர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கொமரய்யா தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இதனால் அவமானமடைந்த கொமரய்யா தனது குழந்தைகளின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தானும் மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் அறிந்த காவல்துறையினர் 5 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்