இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

Mahendran

வெள்ளி, 2 மே 2025 (18:30 IST)
இந்தியாவில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தப்பட்ட மாநிலங்களில் தெலுங்கானா முக்கியமானது. அந்த மாநில சட்டசபையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் 42% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா கடந்த மார்ச் மாதத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
 
இந்த மசோதா மாநில ஆளுநரிடம் அனுப்பப்பட்டது. அதன் பின்னர், ஆளுநர் ஜிஷ்னு தேவ் வர்மா மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார். ஜனாதிபதி ஒப்புதல் அளித்தால், இந்த மசோதா அதிகாரப்பூர்வமாக சட்டமாகும்.
 
இதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்க மாநில காங்கிரஸ் தலைவர்கள், ஆளுநரை நேரில் சந்தித்தனர். சந்திப்புக்குப் பிறகு, BC நலத்துறை அமைச்சர் பூனம் பிரபாகர் தெரிவித்ததாவது: "சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் 42% இடஒதுக்கீடு அளிக்கப்படும் இந்த மசோதா, இந்தியாவுக்கே முன்னுதாரணமாக அமையும்."
 
மேலும், தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் பி. மகேஷ் குமார் கவுட் கூறியதாவது:
"இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய உரிமையாகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானம் இது" என்றார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்