தெலுங்கானா மாநிலத்தில் பழங்குடியின வாலிபர் ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு இளம் பெண்களை காதலித்தார். நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரண்டு பெண்களுக்கும் அவர் இருவரையும் காதலிப்பது தெரிய வந்தது.
இது குறித்து பெண்களின் பெற்றோர்கள் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், இளம்பெண்களின் முடிவை பஞ்சாயத்தார் கேட்டனர். அப்போது இரண்டு இளம் பெண்களும், நாங்கள் இருவருமே அவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்வோம் என கூறியதை அடுத்து, வேறு வழி இல்லை என அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
இதனை அடுத்து, ஒரே மேடையில் தான் காதலித்த இரண்டு பெண்களுக்கும் ஒரே நேரத்தில் வாலிபர் தாலி கட்டினார். திருமணத்தில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டதாகவும், இரண்டு மனைவிகளுடன் அமர்ந்திருந்த மாப்பிள்ளைக்கு அந்த பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், நாங்கள் இருவரும் கண்டிப்பாக அக்கா தங்கை போல் சந்தோஷமாக குடும்பம் எங்கள் கணவருடன் குடும்ப நடத்துவோம் என்று இரு மணமகள்களும் கூறியிருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.