ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

Mahendran

வியாழன், 27 மார்ச் 2025 (12:35 IST)
தக்காளி விலை ஒரு கிலோ மூன்று ரூபாய்க்கு மட்டுமே மொத்த வியாபாரிகள் எடுப்பதாக கூறியதை எடுத்து, வருத்தம் அடைந்த விவசாயிகள் தக்காளியை சாலையில் கொட்டியதால், தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு தக்காளி அதிக அளவில் விளைந்துள்ளது. அதை பறித்து, விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு சென்ற விவசாயிகள், உழவர் சந்தையில் ஒரு பெட்டி (முப்பது கிலோ) தக்காளி வெறும் நூறு ரூபாய்க்கே விற்க முடிந்ததாக கூறினர். இதனைத் தொடர்ந்து, ஒரு கிலோ வெறும் மூன்று ரூபாய் என்ற நிலையில், விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளிகளை சாலையோரம் கொட்டி விட்டு சென்றனர். இதனை கால்நடைகள் சாப்பிடுவதாக கூறப்படுகிறது.
 
ஆந்திர மாநிலத்திலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளதால், பல விவசாயிகள் அறுவடை செய்யாமல் நிலத்திலேயே விட்டுவிட்டதாகவும், அறுவடை செய்து அதை விற்பனைக்குக் கொண்டு செல்லும் லாரி செலவுக்கே லாபம் கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனையான நிலையில், அப்போது தக்காளி விவசாயம் செய்தவர்கள் கோடீஸ்வரர் ஆனார்கள். ஆனால் தற்போது, தக்காளி பயிரிட்டவர்கள் அதை சாலையில் கொட்டி விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்