பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர்: வலைவீசி தேடும் போலீஸ்!

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2017 (15:12 IST)
கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் 6-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகளை தன்னுடைய ஃபோனில் உள்ள ஆபாச படங்களை கட்டாயப்படுத்தி பார்க்க வைத்துள்ளார். இந்த விவகாரம் பூதாகரமாக அந்த ஆசிரியர் தற்போது தலைமறைவாகி உள்ளார்.


 
 
கர்நாடக மாநிலம் டுமகுரு மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றி வருகிறார் 40 வயதான தேவராஜையா என்ற ஆசிரியர். இவர் அந்த பள்ளியில் உள்ள 6 மற்றும் 7-ஆம் வகுப்பை சேர்ந்த மாணவிகளை அழைத்து தனது ஃபோனில் உள்ள ஆபாச படங்களை பார்க்க கட்டாயப்படுத்தியுள்ளார்.
 
மேலும் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதனையடுத்து மாணவிகள் நடந்த சம்பவங்கள் குறித்து தங்கள் பெற்றோரிடம் கூற உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று இதனை வெளியுலகத்துக்கு அம்பலப்படுத்தியுள்ளது.
 
இதனையடுத்து கல்வித் துறை அதிகாரி மகேஷ் மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் தேவராஜையா மீது  வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
ஆனால் இந்த செயலில் ஈடுபட்ட அந்த ஆசிரியர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். இதனையடுத்து தலைமறைவாக உள்ள தேவராஜையாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் மீது முழுமையான விரிவான விசாரணை நடத்தப்படும் என காவல்துறை கூறியுள்ளது.
அடுத்த கட்டுரையில்