தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதிலும், கடந்த இரு நாட்களாக சென்னை உள்ளிட்ட 8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் நவம்பர் 5ம் தேதி வரை கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு கிழக்கு பருவமழையின் ஆரம்பமே சிறப்பாக அமைந்துவிட்டது. இந்த வருடம் சிறப்பான மழை இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால், 2015ம் ஆண்டு பெய்தது போல் இருக்குமா என இப்போது கூற முடியாது. ஆனால், கடந்த வருடத்தில் பெய்த வட கிழக்கு பருவமழையை விட குறைவாக இருக்காது. எனவே, போன வருடம் போல இந்த வருடம் வறட்சி இருக்காது.
எவ்வளவு மழை பெய்யும் எனக் கூறமுடியாது. இந்த மழையை சமாளிக்க நாமும், அரசும் தயாராக இருக்க வேண்டும். பொதுவாக மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்தம் உருவானால் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்வது வழக்கமான ஒன்றுதான். குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை இருக்கும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்”என அவர் தெரிவித்தார்.