வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழில் வானிலை இணையதளம்

ஞாயிறு, 5 நவம்பர் 2017 (11:51 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒவ்வொருவரும் வானிலை அறிவிப்பாளர்களாக மாறி தங்கள் இஷ்டத்திற்கு வானிலை அறிக்கைகளை பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற பெரும்பாலான வானிலை அறிக்கைகள் வதந்திகளாகவே இருப்பதால் பொதுமக்களுக்கு எது உண்மையான வானிலை அறிக்கை என்றே தெரியாமல் உள்ளது.



 


இந்த நிலையில் இதுபோன்ற போலி வானிலை அறிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழில் புதியதாக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

பொதுமக்கள் இந்த புதிய இணையதளத்தின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது, எந்தெந்த மாவட்டத்தில், எவ்வளவு மழை பெய்துள்ளது, கனமழைக்கு என்று ஏதேனும் எச்சரிக்கை இருக்கிறதா என்பதை தமிழிலேயே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

http://www.imdchennai.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று Regional Weather என்பதன் கீழ் உள்ள Forecast Regional என்பதை க்ளிக் செய்தால் அதில் தமிழ், இந்தி என இருமொழிகள் இருக்கும். நமக்கு தேவையான மொழியை க்ளிக் செய்தால் அந்த மொழியிலேயே வானிலை அறிக்கையை பெற்று வதந்திகளை தவிர்த்து கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்