வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் அந்த அணியின் அல்ஸாரி ஜோசப், அணிக் கேப்டன் ஷாய் ஹோப்புடன் வாக்குவாதம் செய்து மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஜோசப் ஒரு ஓவரை விக்கெட் மெய்டனாக வீசினார். ஆனாலும் ஃபீல்டிங் செட் செய்வதில் அவருக்கும் ஹோப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட ஜோசப் பெவிலியனுக்குத் திரும்பினார். பின்னர் அவர் திரும்பி வந்து தனது ஓவர்களை வீசினார்.
இதையடுத்து ஆட்டத்தின் மீதான ஆர்வம் என்னை கட்டுப்பாட்டை இழக்க வைத்துவிட்டது. அதற்காக நான் கேப்டன், சக வீரர்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.