இந்தியாவின் தேசிய விலங்காக தற்போது புலி இருக்கும் நிலையில், அதை பசு மாடாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என மக்களவையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் பாஜக எம்.பி. தேவேந்திர சிங் ராவத் என்பவர் இதுகுறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய பால்வளத் துறை அமைச்சர் பதிலளித்தார். அப்போது அவர், "தற்போதைய தேசிய விலங்கான புலியை மாற்றி, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க எந்த திட்டமும் அரசிடம் இல்லை" என்று தெரிவித்தார்.
மேலும், தேசிய விலங்கை மாற்றுவது என்பது ஒரு நீண்டகால செயல்முறை என்றும், அதற்கு பல்வேறு துறைகளின் ஒப்புதல்கள் மற்றும் விரிவான விவாதங்கள் தேவைப்படும் என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.