சாப்பாடு மட்டுமல்ல, தங்கத்தையும் டெலிவரி செய்யும் ஸ்விக்கி.. இனி வீட்டில் இருந்தே தங்கம் வாங்கலாம்..!

Siva

வெள்ளி, 2 மே 2025 (07:41 IST)
உணவு பொருட்கள் உள்பட பல்வேறு பொருள்களை வீட்டிற்கு சென்ற டோர் டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனம், அடுத்த கட்டமாக தங்கத்தையும் டெலிவரி செய்யும் சேவையை தொடங்கி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் அக்ஷய திருதைய தினத்தில் நகை கடைக்குச் சென்று ஏராளமானோர் நகைகள் வாங்கினார்கள் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிலர் ஆன்லைனில் நகைகளை ஆர்டர் செய்தனர். அந்த நகைகளை ஸ்விக்கி நிறுவனம் டோர் டெலிவரி செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
 
சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், ஸ்விக்கி டெலிவரி பாய் இருசக்கர வாகனத்தில் செல்வதையும், அவருக்கு பின்னால் பாதுகாப்பாளர் ஒருவர் ஒரு தங்கம் வைக்கப்பட்ட பெட்டியை தூக்கிக்கொண்டு செல்லும் காட்சியும் உள்ளது. மேலும், அவர் திருடர்களிடமிருந்து பாதுகாக்க கையில் ஒரு கம்பு வைத்திருக்கிறார் என்பதும் அந்த வீடியோவில் இருந்து தெரிய வந்தது.
 
இது குறித்து அந்த டெலிவரி பாயிடம் கேட்டபோது, “நாங்கள் தங்கத்தையும் டெலிவரி செய்கிறோம். தங்கத்தின் பாதுகாப்புக்காக ஒரு பாதுகாப்பாளரையும் கூடவே அழைத்து செல்கிறோம்” என்று கூறியுள்ளார்.
 
அக்ஷய திருதியை தினத்தில் மட்டுமின்றி அனைத்து தினங்களிலும் தங்கத்தை ஆர்டர் செய்பவர்களுக்கு நேரில் சென்று கொடுக்கும் சேவையை ஸ்விக்கி நிறுவனம் ஆரம்பித்திருப்பதாக தெரிகிறது. எனவே இனி தங்கம் வாங்க வேண்டும் என்றால் கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை , ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்தால் வீட்டிற்கு தங்கம் தேடி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்