அக்சய திருதியை தினம்: தங்கம் வாங்கியது மட்டுமல்ல.. திருமணமும் சாதனை தான்..

Siva

வியாழன், 1 மே 2025 (07:41 IST)
நேற்றைய அட்சய திருதியை தினத்தில் ஏராளமான மக்கள் தங்கம் வாங்கிய நிலையில், நேற்றைய நாளில் 21,000 பேர் திருமணமும் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும், டெல்லியில் மட்டும் திருமணம் தொடர்பாக வணிகங்கள் நேற்று ஒரே நாளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அட்சய திருதியை என்பது தங்கம் வாங்குவதற்கு மட்டுமல்ல, திருமணம் செய்வதற்கும் நல்ல நாளாக கடந்த சில வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த நாளில் திருமண சீசன் உச்சமாக இருக்கும் என்றும், டெல்லியில் உள்ள திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், கேட்டரிங் நிறுவனங்கள், அலங்கார நிறுவனங்கள் உள்ளிட்டவை பிசியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் 21,000 பேர் செய்ததாக கூறப்படுகிறது. தேவை அதிகமாக இருந்ததால், திருமண மண்டபம் முதல் மேக்கப் மேன்கள் வரை விலையை உயர்த்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ள போதிலும், தங்கம் வாங்க அதிக நபர்கள் ஆர்வம் காட்டியதாகவும், கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு அதிகமாக தங்கம் விற்பனை ஆகி வந்ததாகவும் தங்கம் கூறியுள்ளனர்.

இனிவரும் வருடங்களிலும், அட்சய திருதியை  தினத்தில் தங்க நகை விற்பனையாகுவது மட்டுமின்றி, திருமணங்களும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்