பிரதமர் அலுவலக இணையதத்தை இனி தமிழிலும் படிக்கலாம்

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (17:20 IST)
தமிழ் உள்ளிட்ட ஆறு  மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.


 

 
இதற்கு முன் பிரதமர் மோடியின், அலுவலக இணையதளத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே செய்திகள் வெளியிடப்பட்டது. தற்போது தமிழ் உள்ளிட்ட மேலும் ஆறு மொழிகளில் இந்த இணயதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
 
எனவே, பிரதமரின் இணையதளத்தை, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, வங்காளி, மராட்டி மொழிகளை தெரிந்தவர்கள் அனைவரும் படிக்கலாம்.
 
www.pmindia.gov.in என்ற இந்த இணையதளம் மூலம் பிரதமரின் பேச்சு, கருத்து மற்றும் அவரின் அறிவிப்புகளை நாம் படிக்க முடியும். மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இந்த இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
 
இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மோடி “இந்த இணையதளம் மூலம் என்னுடைய கருத்துகள், பல்வேறு மக்களிடையே சென்றடையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்