இரண்டு மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (05:33 IST)
கர்நாடகா, தமிழகம் ஆகிய இரண்டு மாநில அரசுகளும்  சட்டம் ஒருங்கை பராமரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

 
கர்நாடகா காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வரும் 20ம் தேதி வரை நீரை திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று காலை உத்தரவு பிறப்பித்தது.
 
இதைத்தொடர்ந்து கர்நாடகாவில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை நிறுத்துவதோடு அடித்து நொருக்கி தீ வைக்கும் சம்பவங்களில்  சில அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தமிழகத்திலும் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது சில அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
 
தீர்ப்பைத் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
மக்கள் சட்டத்தை மதித்து நடக்கவேண்டும் என்றும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது இரு மாநில அரசுகளின் பொறுப்பு என்றும் வன்முறை சம்பவங்கள் போராட்டங்களை தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்