கேட் தேர்வுகளை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் மறுப்பு!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (18:46 IST)
கேட் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் எம்இ எம்டெக் உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேருவதற்கு கேட் தேர்வு எனப்படும் பொறியியல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது 
 
2022 ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா மூன்றாவது அலையை காரணம் காட்டி இந்த தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன 
 
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்வை கேட் தேர்வுகளை தள்ளி வைத்தால் பெரும் குழப்பம் ஏற்படும் என்றும் எனவே கேட் தேர்வுகளை ஒத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்