அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முப்படை வீரர்களை தேர்வு செய்யும் நோக்கில் அக்னிபாத் என்னும் புதிய திட்டம் மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக பல மனுக்கள் தள்ளுபடி செய்தது
இந்த நிலையில் இந்த மனுக்களை விசாரிக்க நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தள்ளுபடி செய்த தீர்ப்பில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும் எனவே அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் அதே நேரத்தில் இந்திய விமானப்படைக்கான வீரர்கள் தேர்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு வரும் 17ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்றும் மத்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளது