வடமாநில வெள்ளத்திற்கு இதுதான் காரணம்.. மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்..!

Mahendran

வியாழன், 4 செப்டம்பர் 2025 (12:59 IST)
வட இந்தியாவில் உள்ள பல மாநிலங்களையும், தலைநகர் டெல்லியையும் வெள்ளம்  கடுமையாக பாதித்துள்ளதற்கு சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவது தான் காரணம் என உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. 
 
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு "சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டதால்தான் இந்த வெள்ளம் ஏற்பட்டதாக முதன்முறையாக தெரிகிறது," என்று கூறினர்.
 
"பஞ்சாபில் வயல்களும் கிராமங்களும் வெள்ளத்தால் முற்றிலுமாக அடித்து செல்லப்பட்டதாக தெரிகிறது," என்று  கவலை தெரிவித்த நீதிபதிகள், இமாச்சல பிரதேசத்தில் ஆறுகளில் ஏராளமான மரக்கட்டைகள் மிதந்து வருவது குறித்த ஊடக செய்திகளையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
 
இந்த வெள்ளங்கள் குறித்துக் கருத்து தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "துரதிருஷ்டவசமாக, நாம் இயற்கையோடு அதிகமாக விளையாடிவிட்டோம், இப்போது அது நம்மை திருப்பித் தாக்குகிறது" என்று கூறினார்.
 
இந்த விவகாரத்தில், மத்திய அரசு மற்றும் பஞ்சாப், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்