பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய இ-சிம் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் இனி சிம் கார்டு இல்லாமலேயே நெட்வொர்க் இணைப்பை பெற முடியும். இந்த சேவை ஆரம்ப சலுகையாக ஒரு ரூபாய் விலையில் வழங்கப்படுகிறது.
இ-சிம் பயன்படுத்துவதால், உடனடி நெட்வொர்க் செயல்பாடு, சாதனங்களை மாற்றும்போது சிம் கார்டை மாற்ற வேண்டிய தேவை இல்லாதது, மற்றும் அதிக பாதுகாப்பு ஆகியவை கிடைக்கும்.
இ-சிம் அறிமுகத்துடன், புதிய இணைப்பு பெறுபவர்களுக்கும், மற்ற நெட்வொர்க்குகளிலிருந்து எம்.என்.பி. மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மாறுபவர்களுக்கும் ஒரு ரூபாயில் இலவச நன்மைகள் வழங்கும் 'பிரீடம் பிளான்' திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.