மோடி அமித்ஷா மீது வழக்கு தொடர்வேன் என சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி இந்திய குடிமகன் இல்லை, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் சுப்பிரமணியன் சுவாமி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய அரசும் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது
மேலும் இந்த புகார் கடிதத்துடன் பிரிட்டன் அரசிடம் ராகுல் காந்தி வருமான வரி தாக்கல் செய்த நகலையும் இணைத்து தற்போது சமூக வலைதளத்தில் சுப்பிரமணி சாமி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
2003 ஆம் ஆண்டு ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையை பெற்றுள்ளார், அப்படி இருக்கையில் ராகுல் காந்தியை மோடி , சுப்பிரமணியன் சுவாமிபாதுகாப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எனவே ராகுல் காந்தியை பாதுகாத்து வரும் மோடி , அமித்ஷா மீது வழக்கு தொடர்வேன் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சோனியா காந்தி மிரட்டி இருக்கலாம் என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் ராகுல் காந்தியின் குடியுரிமையை திரும்ப பெற வேண்டும் என்று சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.