கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள வெள்ளாஞ்சிரா பகுதியை சேர்ந்தவர் சரத் (வயது 28). இவர் அந்த பகுதியில் 3 டியூசன் மையங்கள் நடத்தி வருகிறார். அதில் ஒரு மையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-1 மாணவி ஒருவர் கணித பாடத்திற்கு டியூசனுக்கு சேர்ந்தார். அப்போது அந்த மாணவிக்கு தெரியாமல் டியூசன் சென்டர் உரிமையாளரான ஆசிரியர் சரத், நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்திருக்கிறார்.
அதனை காண்பித்து மிரட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அத்துடன் அந்த மாணவியின் சமூக வலைத்தள பக்கத்தை கையாணடு வந்துள்ளார். அந்த மாணவி தற்போது பி.டெக். படிக்கும் நிலையில், சரத்தின் டியூசன் சென்டரில் தொடர்ந்து படிக்கிறார்.
தன்னிடம் உள்ள நிர்வாண படங்களை காண்பித்து மிரட்டியபடி கடந்த 3 ஆண்டுகளாக மாணவியை ஆசிரியர் சரத் பாலியல் பலாத்காரம் செய்தபடி இருந்திருக்கிறார். டியூசன் ஆசிரியர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்த தகவலை, அந்த மாணவி தனது தோழி ஒருவரிடம் தெரிவித்தார். தோழியின் அறிவுறுத்தலின் பேரில் டியூசன் ஆசிரியர் சரத் மீது பாதிக்கப்பட்ட மாணவி, ஆளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.