ஆளுநர் காலை தொட்டு வணங்கிய மாணவியின் காலை தொட்டு வணங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி....

J.Durai

திங்கள், 23 செப்டம்பர் 2024 (13:14 IST)
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்தியாபீட சமய வகுப்பு மாணவ சேர்க்கைக்கான பட்டமளிப்பு விழா திருவட்டார் ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
 
இந்த நிகழ்சியில் 24 மாணவிகளூக்கு வித்யாஜோதி பட்டமும் இரண்டு பேருக்கு வித்யா பூசன் பட்டமும் வழங்கபட்டது.
 
பட்டங்களை தமிழக ஆளுனர் ஆர் என் ரவி வழங்கினார் தொடர்ந்து பட்டம் பெற்றவர்கள் ஆளுநருடன் குழு புகைபடம் எடுத்து கொண்டனர்.
 
முன்னதாக பட்டமளிப்பு வேள்வியும் பட்டம் பெற்றவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை நடைபெற்றது 
தொடர்ந்து பட்டம் வழங்கிய ஆர் என் ரவியின் காலில் மாணவி ஒருவர் விழுந்து வணங்கினார்.
 
பதிலாக கவர்னர் அந்த மாணவியின் காலில் தொட்டு வணங்கினார்.
 
பின்னர் சிறப்புரை ஆற்றிய ஆர் என் ரவி  பேசும் போது ...... 
 
இந்து தர்ம வித்யா பீடத்திற்கு நன்றி உடையவனாக இருக்கிறேன்.
பாரதத்தை மிகச் சிறந்த நாடாக உயர்த்தும் நோக்கில்  40 ஆண்டுகளாக இந்திய தர்ம வித்தியா பீடம் செயல்பட்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
 
இந்து தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியுள்ளது.பாரதம்,இந்து தர்மம் இரண்டையும் பிரிக்க முடியாதது. கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளாக அயலக  ஆட்சியில் நமது தர்மத்தை அழிக்க என்னென்ன முடியுமோ அதற்கான முயற்சிகள் செய்தார்கள்.
அவற்றை எல்லாம் கடந்து வந்துள்ளோம். நமது தர்மம் என்றுமே அழிக்க முடியாதது அதனை  பலகீனப்படுத்த முயற்சிகள் நடைபெறுகிறது.
 
ஆனால் அவற்றில் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். சனாதன தர்மம் என்பது எளிமையானது ஆனால் வெளியே தெரியும் போது சிக்கலானதாக தெரிகிறது. ஏனென்றால் பல கடவுள்களை வழிபடுகின்றோம் இதை பயன்படுத்திக் கொண்டு குழப்பத்தை உருவாக்க சிலர் முயற்சி எடுக்கின்றனர் சனாதன தர்மத்தை பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டும் எல்லோருக்கும் விளக்கம் கூறும் அளவிற்கு தயாராக வேண்டும் குறிப்பாக இளைஞர்கள் இளைய சமுதாயத்தினர் இதுகுறித்து விளக்கம் அளிக்க தயாராக வேண்டும்.
 
பாரதத்தில் ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் காஸ்மீர் முதல் குமரிவரை போதிக்கபட்டு வருகின்றன ஒழுக்கத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என சனாதன தர்மம் உணர்ந்து கிறது பாரதம் வலிமை அடைய வேண்டும் என்றால் நாம் சுயமரியாதை மக்களாக மாற வேண்டும்.
 
மதசார்பின்மை அரசியல் சாசனம் அமைக்கப்பட்ட போது அங்கிருந்த வர்கள் நக்கலாக சிரித்தார்கள் அரசியல் சாசனத்தில் இடம் பெறாத மதசார்பின்மை அவசர காலகட்டத்தில் சில சமுதாயங்களை திருப்தி படுத்த கூறபட்டதே உண்மை,
மதசார்பின்மை வெளிநாட்டு கொள்கை அதை ஏற்று கொள்ள முடியாது என்று பேசினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்