ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

Siva

வியாழன், 27 மார்ச் 2025 (07:30 IST)
ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்குவது மாநில அரசுகளின் பொறுப்பாகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "நமது நாடு கூட்டாட்சி முறையின் அடிப்படையில் செயல்படுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் படி, மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.
 
அதன்படி, பட்டியல் 2-இல் வரும் மாநில அலுவல்கள் தொடர்பான பிரிவுகளுக்குள் சூதாட்டம் மற்றும் பந்தயம் போன்றவை அடங்குகின்றன. எனவே, அவற்றை கட்டுப்படுத்த சட்டங்களை உருவாக்குவது மாநில அரசுகளின் சட்டப்பூர்வ அதிகாரத்திற்குட்பட்டது.
 
ஆனால், மத்திய அரசு இவ்விஷயத்தில் அசைவின்றி இருக்கவில்லை. இதுவரை பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், 1,400-க்கும் அதிகமான ஆன்லைன் விளையாட்டுத் தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்