தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை மையம் புதிய தகவல்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (09:13 IST)
தென்மேற்கு பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல் ஒன்றை சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜூலை 6ஆம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழையால் நாடு முழுமைக்கும் பரவலான மழை பொழிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வழக்கமாக ஜூலை 8ஆம் தேதி நாடு முழுவதும் பரவலான மழை பொழியும் என்றும் இந்த நிலையில் நடப்பாண்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழையின் மழை கிடைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
எனவே இன்னும் இரண்டு வாரத்திற்கு பிறகு தமிழகம் உள்பட நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழையால் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்