மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்; குடியரசுத் தலைவரிடம் சோனியா காந்தி சந்திப்பு

Arun Prasath
வியாழன், 27 பிப்ரவரி 2020 (13:42 IST)
டெல்லி வன்முறை குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்தி சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதாரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே மோதல் நிலவியதில் வன்முறை வெடித்தது. இதில் வீடுகள், வாகனங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.

3 நாட்களாக தொடர்ந்த இந்த கலவரத்தில் 215 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று காலை வரை பலி எண்ணிக்கை 30 ஆக இருந்தது. தற்போது சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 5 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் டெல்லி வன்முறை குறித்து மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்ளிட்ட தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்