கொல்கத்தாவை சேர்ந்தவர் சுபாபிரதா மஜூம்தார். இவரது தாயார் பினா மஜீம்தார், மூன்று வருடங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் அரசு ஊழியர் என்பதால் அவருக்கு பென்ஷன் வந்து கொண்டிருந்தது.
இதனால் அவரது மகன் தாயின் உடலை அடக்கம் செய்யாமல் பிரிட்ஜில் மறைத்து வைத்து , பென்ஷன் பணத்தை இவ்வளவு நாட்களாக வாங்கி வந்துள்ளார். இவரின் மீது அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்கள் போலீஸில் புகார் தெரிவித்தனர்.