இந்திய கடற்படை அதிரடி: சோமாலியா கடற்கொள்ளையர்கள் ஒப்படைப்பு

Sinoj
சனி, 23 மார்ச் 2024 (17:38 IST)
இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கொல்கத்தாவில் கொண்டு வரப்பட்ட 35 கடற்கொள்ளையர்கள் இன்று மும்பை போலீஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளர்.
 
சோமாலியாவின் கடலோர பகுதிகளில் அடிக்கடி கப்பல்களை தடுத்து  நிறுத்தி கொள்ளையடிக்கும் சம்பவங்களும், கப்பலை கடத்திச் செல்வதும்  நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், சோமாலியாவின் கிழக்கு கடலோர பகுதியில் எக்ஸ்.எம்.வி. ரூயென் என்ற ஒரு கப்பல் போய்க் கொண்டிருந்தது. இதைத் தடுத்து நிறுத்திய  கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலுக்குள் நுழைந்து கடத்த முயற்சி செய்தனர்.
 
ஆனால், இந்திய கடற்படையினர் இம்முயற்சியை முறியடித்தனர்.இதில், பல்கேரியா, அங்கோலா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் பயணித்த நிலையில், இக்கப்பலில் 30க்கும்  கடற்கொள்ளையர்கள் புகுந்ததாகவும், இந்தக் கப்பலை பயன்படுத்தி அவர்கள் பல கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்திய கடற்படையினர்  அவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர்.
 
இந்திய கடற்படையினர்  நடத்திய அதிரடி  தாக்குதலில் கடற்கொள்ளையர்கள் அனைவரும் சரணடைந்தனர்.  இதில், 35 கடற்கொள்ளையர்காள் மற்றும் கப்பல் ஊழியர்கள் 17 பேர் ஆகியோரை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், அவர்களை இந்திய கடற்படை கப்பலுக்கு வீரர்கள் அழைத்துச் சென்றனர்.
 
அதனைத்தொடர்ந்து, 35 கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் கொல்கத்தாவில்  கொண்டு வரபப்ட்டு, இன்று காலையில் மும்பை  மும்பை போலீஸாரிடம்  ஒப்படைத்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்