பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டாவின் பதவி காலம் ஏற்கனவே முடிவடைந்து இருந்த நிலையில் தேர்தலை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவடைந்து பதவி ஏற்பு விழாவும் முடிவடைந்து விட்டதை அடுத்து பாஜக தேசிய தலைவர் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் தெலங்கானாவை சேர்ந்த கே.லட்சுமண், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுனில் பன்சல், ராஜஸ்தானை சேர்ந்த ஓம் மாத்தூர், பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோர் பெயர்களும் பாஜக தேசிய தலைவர் பதவிக்கு பெயர் அடிபடுகிறது.