2026 தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக vs பாஜக தான்... திருச்சி சூர்யா பேட்டி..!

Siva

செவ்வாய், 11 ஜூன் 2024 (13:43 IST)
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக மற்றும் பாஜக இடையே தான் போட்டி என திருச்சி சூர்யா பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் எந்த ஒரு எம்பியும் தேர்வு செய்யப்படாவிட்டாலும் மூன்று தமிழர்களுக்கு மத்திய அரசில் அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. இனி வருங்காலத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர்களுக்கும் கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதை மக்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் பாஜக இடையே தான் உண்மையான போட்டி. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக தற்போது பலம் இழந்து காணப்படுகிறது. பல இடங்களில் டெபாசிட் கூட கிடைக்கவில்லை.

இதை பார்க்கும் போது 2026 ஆம் தேர்தலில் திமுகவின் ஒரே எதிரி பாஜக தான் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த பாஜக, 2026 தேர்தலில் திமுகவையும் பின் தள்ளிவிட்டு ஆட்சியைப் பிடிக்கும் என்றும் திருச்சி சூர்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்