பாஜகவில் இணைந்தார் எஸ்எம்.கிருஷ்ணா. விரைவில் தமிழக கவர்னர் பதவி?

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (22:17 IST)
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இணையவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இன்று அவர் பாஜகவில் இணைந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு  தமிழகத்தில் காலியாக உள்ள கவர்னர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 


இன்று மாலை டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில், எஸ்எம்.கிருஷ்ணா, பாஜக.,வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவருடன் கர்நாடக மாநிலத்தை மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, ஆனந்த் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மத்திய அமைச்சர் மற்றும் முதல்வராக இருந்த அனுபவம் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு இருப்பதால் இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையில் அவர்தான் தமிழக கவர்னருக்கு சரியான தேர்வு என மோடி மற்றும் அமித்ஷா கருதுவதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே தமிழக கவர்னராக எஸ்எம்.கிருஷ்ணா எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்