முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் பாஜக கிழிக்கும் கோட்டைத் தாண்டாமல் அதிமுக செயல்பட்டு வருவதாகவும் பாஜகவின் அனைத்து திட்டங்களுக்கும் தலையாட்டி ஆதரவு தருவதாகவும், பாஜகவை எதிர்த்து ஒரு கேள்வி கூட கேட்காமல் அதிமுக அரசு செயல்பட்டு வருவதாகவும், உண்மையில் பாஜக அரசுதான் நிழல் ஆட்சியாக தமிழகத்தில் இருந்து வருவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்
இரண்டரை ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி, 10க்கும் மேற்பட்ட அமைச்சர் பதவி என அதிகமாக பாஜகவிடம் டிமாண்ட் செய்ததால் கூட்டணி உடைந்தது. இந்த நிலையில் தற்போது பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யும் சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்கும் நிலைக்கு வந்துவிட்டது