அப்போது அவர் மேடையில் பின்வருமாறு பேசினார், பொருளாதார மந்த நிலைக்கு மத்திய அரசின் தவறான நடவடிக்கையே காரணம். தேனி தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுமான ரவீந்தரநாத் வெற்றி பெற்றார்.
ஒரு ஒட்டுக்கு ரூ.2,000 கொடுத்து ரூ.200 கோடி வரை செலவு செய்து வெற்றி பெற்றார். மேலும், எனது சொந்த ஊரான ஈரோட்டில் சீட் கிடைக்காததால் தேனியில் போட்டியிட்டேன். நான் சொந்த ஊரில் சீட் கிடைக்காததும் அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தேனிக்கு சென்று தவறு செய்துவிட்டேன் என பேசினார்.