மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு! – சிவசேனாவால் அரசியலில் திருப்பம்!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (13:41 IST)
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக இடையே பலத்த போட்டி நிலவும் நிலையில் சிவசேனா மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் எழுந்து வருவதால் அங்கு பல தொகுதிகள் பதட்டமான தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட போவதில்லை என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. திரிணாமூல் காங்கிரஸை எதிர்த்து பாஜக போட்டியிடும் நிலையில் பாஜகவை வீழ்த்த மம்தா பானர்ஜிக்கு தங்களது ஆதரவை அளிப்பதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்