சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளி வைஷாலி பட், கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பியவர். அவர் தற்போது பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பைசரன் பள்ளத்தாக்கில் தனது கணவருடன் சுற்றுலா சென்ற வைஷாலி, பயங்கரவாதிகள் தாக்கிய இடத்தை தாக்குதலுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அந்த இடத்தில் இருந்து திரும்பி விட்டதாக கூறினார். அதன்பின் பயங்கரவாதிகள் திடீரென அப்பகுதியில் இருந்த 26 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
இந்த சம்பவம் வைஷாலி மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என நம்பினார்; ஆனால் நாட்கள் கடந்தும் மாற்றம் காணாமல் அவர் மனநிலை சோர்வடைந்தார். மே 7-ஆம் தேதி, இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' பற்றிய செய்தி அறிந்தபோது, அவர் மனம் பதியாமல் அழுதார்.
இதுகுறித்து அவர் கூறியபோது "நான் ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் இருந்தேன். கொஞ்சம் தாமதமாகி இருந்தால் நானும் என் கணவரும் உயிரிழந்திருக்கக்கூடிய நிலையில் இருந்தோம். அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் தினமும் செய்தித்தாள்களை வாசித்தேன். ஆனால் முன்னேற்றமின்றி இருந்தது மனதை மனச்சோர்விற்கு உட்படுத்தியது. ஆனாலும் ஆபரேஷன் சிந்தூர் செய்தி வந்தபோது நான் என்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். சிந்தூர் என்ற பெயர் சரியான தேர்வு; இதை மோடியை தவிர யாரும் செய்ய முடியாது, அவருக்க்கு எனது நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.