இந்திய சந்தையில் புதிய முயற்சியாக பிரெஞ்ச் மொபைல் தயாரிப்பாளரான Alcatel, தனது 'V3' சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் V3 Classic, V3 Pro மற்றும் V3 Ultra என மூன்று மாடல்கள் இந்திய சந்தைக்கு வந்துள்ளன.
இந்த மூன்று போன்களும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. டிக்சன் குழுமத்தின் துணை நிறுவனமான பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் இந்த தயாரிப்பை கையாளுகிறது. வாடிக்கையாளர்களுக்கேற்ற விலையிலும், இளைஞர்களை ஈர்க்கும் வசதிகளோடும் Alcatel இந்த புதிய முயற்சியை ஆரம்பித்துள்ளது.
இந்த V3 ஸ்மார்ட்போன்கள் ஜூன் 2ஆம் தேதி முதல் Flipkart வாயிலாக விற்பனைக்கு வரவிருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
6.67 இன்ச் HD+ Nxtபேப்பர் டிஸ்ப்ளே
Android 15 இயக்கத்துடன்
MediaTek Dimensity 6300 சிப்செட்
பின்புறம் 50MP + துணை கேமரா
8MP செல்ஃபி கேமரா
5,010mAh பேட்டரி, 18W சார்ஜிங்
6GB RAM, 128GB சேமிப்பு
5G வசதி, நானோ சிம் + eSIM
USB Type-C போர்ட்
இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்
இந்த போன்களின் ஆரம்ப விலை ரூ.12,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Alcatel நிறுவனத்தின் இந்த வெளியீடு இந்தியாவில் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.